பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

 பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி. 


பாகிஸ்தான் அணி இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. 

முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 3-0 என கைப்பற்றியது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. 

முதலில் துடுப்பெடுத்தடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 19.5ஓவரில் சகல விக்கெட்களையும் இழந்து 200 ரன்களை எடுத்தது. 

201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 155 ரன்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது. 

45 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலை பெற்றுள்ளது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.