எரிபொருள் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

எரிபொருள் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு. 


சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகளின் இளவரசர்கள் இடையே ஏற்பட்டுள்ள மோதலால் கச்சா எண்ணெய் விலை 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

 பெட்ரோலிய உற்பத்தி அளவு மற்றும் அதன் விலையை மசகு எண்ணெய் ஏற்றுமதி செய்யும் ஒபேக் கூட்டமைப்பு நாடுகள் தீர்மானிக்கின்றன. 

கொரோனா காரணமாக கச்சா எண்ணெய் உற்பத்தியில் இருந்த தேக்கத்துக்கு முடிவு கட்டி உற்பத்தியை அதிகரிக்க உறுப்பு நாடுகள் விருப்பம் தெரிவித்தன. 

ஆனால் மசகு எண்ணெய் உற்பத்தி அளவை 8 மாதங்களுக்குப் பிறகு அதிகரிக்கலாம் என்று சவுதி அரேபியா மற்றும் ரஷ்யா யோசனை தெரிவித்தன. இதனை ஐக்கிய அரபு அமீரகம் ஏற்றுக்கொள்ளவில்லை. 

மசகு எண்ணெய் உற்பத்திக்கு ஐக்கிய அரபு அமீரகம் செய்துள்ள முதலீடுகளே இதற்குக் காரணமாகும். இப்பிரச்சினையால் கடந்த வாரம் நடைபெறவிருந்த ஒபெக் நாடுகள் கூட்டம் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது. 

இதனிடையே சவூதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் அபுதாபி இளவரசர் முகமது பின் சயித் இடையே தொழில், தூதரக உறவில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. சவூதி அரேபியா தமது நாட்டில் தொழில் தொடங்குமாறு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

 இதனால் போட்டி உருவாகி துபாய், அபுதாபியின் பொருளாதார வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படும் என்று ஐக்கிய அரபு அமீரகம் கருதுகிறது. 

மேலும் இஸ்ரேல் உடன் ஐக்கிய அரபு அமீரகம் தூதரக உறவை ஏற்படுத்திக் கொண்டதும் சவூதி அரேபியாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற மோதல் போக்கும் மசகு எண்ணெய் உற்பத்தி தேக்கமடையக் காரணமாக கருதப்படுகிறது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.