முதன் முறையாக ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிப்பு - எங்கு தெரியுமா ?

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀


 முதன் முறையாக ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிப்பு - எங்கு தெரியுமா ? 

கேரளத்தில் முதன்முறையாக கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி ,ஏடிஎஸ் கொசுக்களால் பரவும் வைரஸ் ஜிகா வைரஸ் பாதிப்பு முதலில் ஆப்பிரிக்காவிலும் பின்னர் தென் அமெரிக்கா உள்ளிட்ட பிற வெப்பமண்டல பகுதிகளிலும் கண்டறியப்பட்டது. 

இந்த நோய் பாதித்த கர்ப்பிணிகள் பிரசவிக்கும் குழந்தைகளின் தலை இயல்பான குழந்தையின் தலை அளவைக் காட்டிலும் சிறியதாக இருக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அந்நிலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 24 வயதான பெண்ணுக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் மருத்துவக் கண்காணிப்பில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட அறிகுறிகளுடன் அவதிப்பட்டு வந்த கர்ப்பிணியான அவர் புதன்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முன்னதாக கடந்த ஒருவாரத்திற்கு முன் அவரது தாயாரும் இதே அறிகுறிகளை வெளிப்படுத்தியிருந்ததால் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் தொடர்பில் இருந்த மேலும் 13 பேரின் பரிசோதனை மாதிரிகளை புணேவில் உள்ள தேசிய நுண்ணுயிரிகள் ஆய்வு நிலையத்திற்கு மாநில சுகாதாரத்துறை அனுப்பிவைத்துள்ளது.

 மேலும் ,இதனைத் தொடர்ந்து மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.