அறுவை சிகிச்சைக்காக போப் பிரான்சிஸ் ஆஸ்பத்திரியில் அனுமதி.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 


அறுவை சிகிச்சைக்காக போப் பிரான்சிஸ் ஆஸ்பத்திரியில் அனுமதி. 

கடந்த வாரம் வழிபாட்டில் பங்கேற்ற மக்களிடம், தனக்காக சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்ளுமாறு போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்திருந்தார். 

போப் ஆண்டவர் பிரான்சிஸ் (வயது 84) கடந்த சில நாட்களாக குடல் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார். குறிப்பாக பெருங்குடல் சுருக்கம் காரணமாக பாதிக்கப்பட்டு இருந்தார்.

 எனவே இதற்கு சிகிச்சை மேற்கொள்வதற்காக இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள கெமெல்லி ஆஸ்பத்திரியில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.

 அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. போப் பிரான்சிசுக்கு எப்போது அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்ற விவரம் தெரியவில்லை. 

எனினும் அறுவை சிகிச்சை முடிந்ததும் அது குறித்த தகவல் வெளியிடப்படும் என வாடிகன் அறிவித்து உள்ளது. அதேநேரம் கடந்த வாரம் வழிபாட்டில் பங்கேற்ற மக்களிடம், தனக்காக சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்ளுமாறு அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். 

இந்த அறுவை சிகிச்சை குறித்தே அவர் இத்தகைய வேண்டுகோள் விடுத்திருந்ததாக கருதப்படுகிறது.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.