உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀


 உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள். 

இன்று காலை 6 மணிமுதல் அமுலாகும் வகையில் மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

 அதற்கமைய, கேகாலை, அம்பாறை மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 3 கிராம சேவகர் பிரிவுகள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

 முல்லைத்தீவு மாவட்டத்தின் நாயாறு காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட செம்மலை கிழக்கு கிராம சேவகர் பிரிவில் நாயாறு மீன்பிடித்துறை பகுதி கேகாலை மாவட்டத்தின் கேகாலை காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட மிஹிபிட்டி கிராம சேவகர் பிரிவின் மாதெய்யாவ கிராமம் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை காவல்துறை அதிகாரப்பிரிவின் மருதமுனை -3 கிராம சேவகர் பிரிவு ஆகிய பிரதேசங்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. 

இதேவேளை, கேகாலை மாவட்டத்தின் ஹலமட மற்றும் குருணாகல் மாவட்டத்தின் இலுப்பு கெதர கிராம சேவகர் பிரிவின் விலோகொட கிராமம் என்பன தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டன. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.