கனடாவில் வரலாறு காணாத வெப்பம்:

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

 கனடாவில் வரலாறு காணாத வெப்பம்: 


130-இற்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத்தீ பரவல். கனடாவில் நிலவும் வரலாறு காணாத வெப்பம் காரணமாக 130-இற்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத்தீ பரவியுள்ளது. 

கனடாவின் மேற்கு பிராந்தியத்தில் நேற்று ஏற்பட்ட மின்னலால் பல இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் வரலாறு காணாத அதிகரித்த வெப்பத்துடனான வானிலை நிலவுகிறது. 

இதனால் அவசர சேவைகளுக்கு உதவியளிப்பதற்கு இராணுவ விமானங்களை அனுப்பவுள்ளதாக கனடாவின் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த வாரத்தின் ஆரம்பம் முதல் Lytton நகரிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

 அங்கு 49.6 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதேவேளை, பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள லய்டொன் பகுதியில் பரவிய காட்டுத்தீ காரணமாக குடியிருப்பாளர்கள் தங்கள் உடைமைகள் எதுவும் இன்றி வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. 

கனடாவில் அதிகரித்துள்ள வெப்பத்துடனான வானிலையினால் இதுவரை 500-இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.