கெளதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘கிடார் கம்பி மேலே நின்று’.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

 கெளதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘கிடார் கம்பி மேலே நின்று’. 


மணிரத்னம் க்யூப் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் நவரசா ஆந்தாலஜியில், கௌதம் இயக்கும் படத்துக்கு ’கிடார் கம்பி மேலே நின்று’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

இதில் சூர்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஓடிடி தளங்கள் அறிமுகமான பிறகு ஆந்தாலஜிகள் அதிகமாக எடுக்கப்படுகின்றன. பல இயக்குனர்கள் தனித்தனியாக இயக்கும் குறும்படங்களை இணைந்து ஆந்தாலஜியாக வெளியிடுகின்றனர்.

 இவ்வகை படங்களில் எதை படமாக்கலாம் என்ற கருப்பொருளை வைத்து அவரவர் பாணியில் குறும்படத்தை உருவாக்குவது வழக்கம். நவரசாவில் கோபம், சோகம், மகிழ்ச்சி, தாபம் உள்ளிட்ட ஒன்பது உணர்ச்சிகளின் அடிப்படையில் ஒன்பது இயக்குனர்கள் கதைகள் உருவாக்கி படமாக்கியுள்ளனர். ஒவ்வொருவருக்கும் ஒரு ரசம். 

இதில் கௌதம் இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கிறார். இதற்கு ’கிடார் கம்பி மேலே நின்று’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. தமிழில் தற்போது வித்தியாசமான சொற்றொடர்களை பயன்படுத்தி பெயர் வைப்பது கௌதம் மட்டுமே. ’வேட்டையாடு விளையாடு’, ’பச்சைக்கிளி முத்துச்சரம்’, ’வாரணம் ஆயிரம்’, ’நீதானே என் பொன்வசந்தம்’, ’அச்சம் என்பது மடமையடா’ என பாடல் வரிகளை தலைப்பாக்கியவர், ’எனை நோக்கி பாயும் தோட்டா’, ’நதிகளில் நீராடும் சூரியன்’, ’கிடார் கம்பி மேலே நின்று’ என சொற்றொடர்களையும் படத்தின் தலைப்பாக்கி வருகிறார். 

ஒரே மாதிரியாக வைக்கப்படும் படப்பெயர்களுக்கு மத்தியில் இவை தனித்தும், வித்தியாசமாகவும், ரசிக்கக் கூடியதாகவும் இருப்பது சிறப்பு. நவரசா ஆந்தாலஜியில் கார்த்திக் நரேன் இயக்கும் படத்துக்கு ’அக்னி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

ஏ.ஆர்.ரஹ்மான் உள்பட ஆறு இசையமைப்பாளர்கள் இதற்கு இசையமைக்கிறார்கள். ஆகஸ்டில் நவரசா நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.