வரலாற்றில் இன்று ஜூலை 21.

 வரலாற்றில் இன்று ஜூலை 21.


ஜூலை 21  கிரிகோரியன் ஆண்டின் 202 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 203 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 163 நாட்கள் உள்ளன.


இன்றைய தின நிகழ்வுகள்.


👉கிமு 356 – ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றான கிரேக்கக் கோயில் ஆர்ட்டெமிஸ் கோயில் தீவைத்துக் கொளுத்தப்பட்டு அழிக்கப்பட்டது.

👉 230 – முதலாம் அர்பனுக்குப் பின்னர் போந்தியன் 18-வது திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார்.

👉365 – கிரேக்கத்தின் கிரேட்டு தீவில் பெரும் நிலநடுக்கம், ஆழிப்பேரலை ஏற்பட்டதில், லிபியா, அலெக்சாந்திரியாவில் பெரும் சேதம் ஏற்பட்டது. பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

👉905 – இத்தாலியின் மன்னர் முதலாம் பெரெங்கார் அங்கேரியில் இருந்து தருவிக்கப்பட்ட கூலிப்படைகளுடன் இணைந்து வெரோனா நகரில் பிரான்சியப் படைகளைத் தோற்கடித்தனர். பிரான்சின் மூன்றாம் லூயி கைது செய்யப்பட்டு, குருடாக்கப்பட்டார்.

👉1545 – ஆங்கிலக் கால்வாயில் வைட்டுத் தீவில் பிரெஞ்சுப் படைகள் முதல் தடவையாகத் தரையிறங்கின.

👉1718 – உதுமானியப் பேரரசு, வெனிசுக் குடியரசு, ஆத்திரியா ஆகியவற்றுக்கிடையில் அமைதி உடன்பாடு ஏற்பட்டது.

👉1774 – உருசியாவும் உதுமானியப் பேரரசும் தமது ஏழாண்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தன.

👉1798 – நெப்போலியனின் படைகள் உதுமானிய-மம்லூக் படைகளை கெய்ரோ அருகில் நடந்த போரில் வென்றன.

👉1831 – பெல்ஜியத்தின் முதலாவது மன்னர் முதலாம் லெப்பால்ட் முடிசூடினார்.

👉1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: வர்ஜீனியாவில் இடம்பெற்ற முக்கியமான போரில் கூட்டமைப்பு அணி வெற்றி பெற்றது.

👉1907 – கலிபோர்னியாவில் கொலம்பியா பயணிகள் கப்பல் சான் பெத்ரோ கப்பலுடன் மோதியதில் 88 பேர் உயிரிழந்தனர்.

👉1919 – வான்கப்பல் ஒன்று சிகாகோவில் கட்டடம் ஒன்றுடன் மோதியதில் 12 பேர் உயிரிழந்தனர்.

👉1925 – அமெரிக்காவில் டென்னிசி மாநிலத்தில் உயர்நிலைப் பள்ளி ஒன்றில் படிவளர்ச்சிக் கொள்கையை வகுப்பில் கற்பித்தமைக்காக ஆசிரியர் ஒருவருக்கு $100 தண்டம் அறவிடப்பட்டது.

👉1944 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படைகள் குவாமில் தரையிறங்கி சப்பானியப் படைகளுக்கெதிராகத் தாக்குதலை ஆரம்பித்தனர் (ஆகத்து 10 இல் இது நிறைவடைந்தது).

👉1944 – இரண்டாம் உலகப் போர்: சூலை 20 இல் இட்லரை கொலை செய்யத் திட்டமிட்டவர்கள் பெர்லினில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

👉1952 – கலிபோர்னியாவின் தெற்கே 7.3-அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 12 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.

👉1954 – ஜெனீவா மாநாட்டில் வியட்நாம் வடக்கு வியட்நாம், தெற்கு வியட்நாம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.

👉1960 – சிறிமாவோ பண்டாரநாயக்கா இலங்கையின் பிரதமராகப் பதவியேற்றார். உலக நாடொன்றின் முதலாவது பெண் அரசுத்தலைவர் ஆவார்.

👉1961 – மனிதரை விண்ணுக்கு அனுப்பும் நாசாவின் திட்டத்தில் இரண்டாவது பயணம் மேர்க்குரி-ரெட்ஸ்டோன் 4. கஸ் கிரிசம் என்பவர் விண்வெளிக்குப் பயணம் சென்றார்.

👉1964 – சிங்கப்பூரில் மலாய் மற்றும் சீனர்களுக்கிடையே கலவரம் மூண்டதில் 23 பேர் உயிரிழந்து பலர் காயமடைந்தனர்.

👉1969 – நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனில் நடந்த முதல் மனிதர் என்ற புகழைப் பெற்றார்.

👉1970 – 11 ஆண்டுகளின் பின்னர் எகிப்தில் அஸ்வான் அணை கட்டி முடிக்கப்பட்டது.

👉1972 – வட அயர்லாந்து தலைநகர் பெல்பாஸ்ட்டில் ஐரியக் குடியரசுப் படையினர் நடத்திய 22 தொடர் குண்டுவெடிப்புகளில் 9 பேர் கொல்லப்பட்டு 130 பேர் காயமடைந்தனர்.

👉1976 – அயர்லாந்துக்கான பிரித்தானியத் தூதுவர் ஐரியக் குடியரசுப் படையினரால் கொல்லப்பட்டார்.

👉1977 – நான்கு நாட்கள் நீடித்த லிபிய-எகிப்தியப் போர் ஆரம்பமானது.

👉1983 – குடியிருப்புப் பகுதி ஒன்றில் உலகின் மிகக்குறைந்த வெப்பநிலை −89.2 °C (−128.6 °F) அந்தாட்டிக்காவில் வசுத்தோக் நிலையத்தில் பதியப்பட்டது.

👉1995 – சீனக் குடியரசின் வடக்குப் பக்கக் கடற்பகுதி மீது மக்கள் விடுதலை இராணுவம் எறிகணைகளை வீசியது.

👉2001 – சப்பான், ஒக்கூராவில் பாதசாரிகளின் பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 11 பேர் உயிரிழந்தனர். 120 பேர் காயமடைந்தனர்.

👉2008 – ராம் பரன் யாதவ் நேப்பாளத்தின் முதலாவது குடியரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

👉2011 – நாசாவின் விண்ணோடத் திட்டம் அட்லாண்டிசு தரையிறங்கியதுடன் நிறைவு பெற்றது.


இன்றைய தின பிறப்புகள்.


👉 1515 – பிலிப்பு நேரி, இத்தாலியக் கத்தோலிக்கப் புனிதர் (இ. 1595)

👉1620 – ழீன் பிக்கார்டு, பிரான்சிய வானியலாளர் (இ. 1682)

👉1654 – பேத்ரோ கலூங்சோத், பிலிப்பீனிய கத்தோலிக்கர், மறைபணியாளர் (இ. 1672)

👉1899 – ஏர்னெஸ்ட் ஹெமிங்வே, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் (இ. 1961)

👉1911 – மார்ஷல் மெக்லுன், கனடிய மெய்யியலாளர் (இ. 1980)

👉1911 – எஃப். எக்ஸ். சி. நடராசா, ஈழத்து எழுத்தாளர்.

👉1917 – க. சண்முகம்பிள்ளை, ஈழத்து மிருதங்கக் கலைஞர் (இ. 2010)

👉1929 – செமியோன் ரூதின், சோவியத் மொழியியலாளர், இந்தியவியலாளர், தமிழறிஞர் (இ. 1973)

👉1930 – ஆனந்த் பக்சி, இந்தியக் கவிஞர் (இ. 2002)

👉1934 – சந்து போர்டே, இந்தியத் துடுப்பாளர்.

👉1940 – சங்கர்சிங் வகேலா, இந்திய, குஜராத் அரசியல்வாதி.

👉1944 – ஜோன் அட்டா மில்ஸ், கானாவின் 3வது அரசுத்தலைவர் (இ. 2012)

👉1947 – சேட்டன் சவ்ஹான், இந்தியத் துடுப்பாளர்.

👉1951 – ராபின் வில்லியம்ஸ், அமெரிக நடிகர் (இ. 2014)

👉1957 – இசுடீவன் இலோவென், சுவீடனின் 33வது பிரதமர்.

👉1960 – அமர் சிங் சம்கிலா, இந்தியப் பாடகர் (இ. 1988)

👉1971 – ஆர். கண்ணன், இந்தியத் திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர்.

👉1975 – ரவீந்திர புஸ்பகுமார், இலங்கைத் துடுப்பாளர்

👉1978 – ஜஸ்டின் பர்தா, அமெரிக்க நடிகர்.

👉1978 – ஜோஷ் ஹர்த்நேட், அமெரிக்க நடிகர்.

👉1978 – டாமியன் மார்லி, யமெய்க்கா பாடகர்.

👉1984 – பரத், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்.


இன்றைய தின இறப்புகள்.


👉 1796 – ராபர்ட் பர்ன்ஸ், இசுக்கொட்டியக் கவிஞர் (பி. 1759)

👉1889 – வேதநாயகம் பிள்ளை, தமிழக எழுத்தாளர் (பி. 1826)

👉1899 – இராபர்ட் கிரீன் இங்கர்சால், அமெரிக்க அரசியல்வாதி (பி. 1833)

👉1920 – பியம்மேத்தா வில்சன், ஆங்கிலேய வானியலாளர் (பி. 1864)

👉1929 – ஓ. தணிகாசலம் செட்டியார், நீதிக்கட்சித் தலைவர், வழக்குரைஞர் (பி. 1874)

👉1967 – ஆல்பர்ட் லுத்துலி, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற தென்னாப்பிரிக்க அரசியல்வாதி (பி. 1898)

👉1984 – டி. வி. இராமசுப்பையர், தமிழக ஊடகவியலாளர், தினமலர் நிறுவனர் (பி. 1908)

👉1998 – அலன் ஷெப்பர்ட், அமெரிக்க விண்வெளி வீரர் (பி. 1923)

👉2001 – சிவாஜி கணேசன், தமிழ்த் திரைப்பட நடிகர் (பி. 1927)

👉2006 – எல். எம். நர்துக்கி, இத்தாலிய-அமொிக்க இயற்பியலாளா் (பி. 1942)

👉2009 – கங்குபாய், இந்துத்தானிப் பாடகி (பி. 1913)


இன்றைய தின சிறப்பு நாள்.


👉விடுதலை நாள் (குவாம், 1944)

👉இன நல்லிணக்க நாள் (சிங்கப்பூர்)

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.