ஜூலை 05 முதல் நாட்டின் சுகாதார வழிமுறைகளில் மாற்றம்.

 𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀


ஜூலை 05 முதல் நாட்டின் சுகாதார வழிமுறைகளில் மாற்றம்.


நாடளாவிய ரீதியில் நடைமுறைக்கு வரும் வகையில் எதிர்வரும் திங்கள் (05) முதல் புதிய சுகாதார வழிகாட்டல்களை உள்ளடக்கியவாறு சுற்றறிக்கை ஒன்றை வெளியிடயிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.


இதன்படி ,நாட்டின் தற்போதைய கொரோனா பரவல சூழ்நிலையை மீளாய்வு செய்துள்ளதோடு, வரவிருக்கும் புதிய வழி முறைகளை உள்ளடக்கிய சுற்றறிக்கை எதிர்வரும் 5ஆம் திகதி வெளியிடப்படயிருப்பதாக மேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட மருத்துவர் தம்மிக ஜயலத் தெரிவித்துள்ளார்.


சுகாதார அமைச்சின் விசேட தொழில்நுட்ப குழு நாட்டில் கொரோனா பரவல் தொடர்பில் மீளாய்வு நடவடிக்கைகளை செய்து வருகின்றது.


சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்கள் முழு நாட்டுக்கும் மேல் மாகாணத்திற்கும் என தனியாகவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.


மேலும் அதேவேளை மேல் மாகாணத்தில் தடை செய்யப்பட்டுள்ள நடவடிக்கைகளை மீறி செயற்பட்ட புடைவை வர்த்தக நிறுவனங்கள் சுகாதாரத் துறையினரால் அறிவுறுத்தப்பட்டு பின்னர் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶


#WHATSAPP_GROUPS

👇👇👇👇

https://chat.whatsapp.com/BV6Jb9v2Uwg6r7csYAee9w


#FACEBOOK_PAGE

👇👇👇

Https://www.facebook.com/110325207412634?referrer=whatsapp


#TELEGRAM_CHANNEL

👇👇👇

https://t.me/itmchan


WEBSITE

👇👇👇

http://www.InternationalTamilMedia.com


#விளம்பரங்களுக்கு

👇👇👇

Http://wa.me/+94777735656

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.