கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் சுவை,வாசனை உணர்வை மீண்டும் பெற 1 வருடம் ஆகலாம் - ஆய்வு

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀


 கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் சுவை,வாசனை உணர்வை மீண்டும் பெற 1 வருடம் ஆகலாம் - ஆய்வு 

2020-ஆம் ஆண்டின் முற்பகுதியில் கோவிட்-19 தொற்று நோய் உலகில் பரவ துவங்கியதில் இருந்து, தொற்று ஒருவருக்கு பரவியுள்ளதற்கான ஏராளமான அறிகுறிகள் வெளிப்பட்டு கொண்டே இருக்கின்றன. 

கோவிட் தொற்றுக்கான அறிகுறிகள், தொற்றிலிருந்து மீண்ட பின்னும் பலருக்கு காணப்படுகிறது. அவ்வாறு தொடர்ந்து அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் எத்தனை முறை டெஸ்ட் எடுத்து பார்த்தாலும் கோவிட் இல்லை என்ற ரிசல்ட் தான் வரும்.

 தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்படும் நிலையில், அவர்களில் சில பொதுவான அறிகுறிகள் காணப்படுவதாக கண்டறியப்பட்டு உள்ளது. தடுப்பு மருந்து போட்டு கொண்டவர்களுக்கு தொற்று ஏற்படும் போது தொடர்ச்சியான தும்மல் முக்கிய பொதுவான அறிகுறியாக உள்ளது.

 இப்படி தடுப்பூசி போட்டு கொள்ளாமல் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள், தடுப்பூசி போட்டு கொண்ட பின்னரும் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் என அறிகுறிகள் வேறுபட்டு காணப்படுகிறது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்படும் பலருக்கு முக்கிய அறிகுறிகளாக 2 வெளிப்பட்டன. 

ஒன்று சுவையிழப்பு மற்றொன்று வாசனை இழப்பு. சுவை இழப்பை விட வாசனை இழப்பு (அனோஸ்மியா ) அறிகுறி தொற்று பாதித்த பலருக்கு வெளிப்பட்டு வருகிறது. கொரோனா காரணமாக ஏற்படும் முழு வாசனையிழப்பு அறிகுறியானது ஒரு நபரின் வாழ்க்கை தரத்தை வெகுவாக பாதிக்கும். 

இந்த அறிகுறியால் உணவுகளை ருசிப்பது, சுற்றுச்சூழலில் வான்வழி ஆபத்துக்களை கண்டறிவது மற்றும் புலன்களைப் பொறுத்து வெளிப்படும் செயல்களை செய்வதில் சிக்கல் ஏற்படும். கோவிட் -19 தொற்று பாதிப்பிற்கு பிறகு சுவை மற்றும் வாசனையை இழந்து விட்ட ஒருவருக்கு, இந்த அறிகுறிகள் மறைய ஒரு வருடம் ஆகலாம் என்று ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. ஜமா நெட்வொர்க் ஓபன் மருத்துவ இதழில் இது தொடர்பான ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 

பிரான்ஸில் இருக்கும் யுனிவர்சிட்டி ஹாஸ்பிடல்ஸ் ஆஃப் ஸ்ட்ராஸ்பேர்க்கை (University Hospitals of Strasbourg) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கோவிட் -19 தொற்று பாதிப்பு காரணமாக சுமார் 1 வருடம் வரை வாசனை மற்றும் சுவை உணர்வை இழந்த 97 நோயாளிகளை ஆய்வு செய்தனர். இந்த நோயாளிகளை ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும் ஒரு சர்வேயை முடிக்க சொல்லி கேட்டனர் ஆராய்ச்சியாளர்கள். 

இந்த 97 நோயாளிகளில் 51 பேர் சுய அறிக்கை கணக்கெடுப்புகளை உறுதிப்படுத்த அகநிலை மற்றும் புறநிலை ஆல்ஃபாக்டரி டெஸ்ட்டிற்கு (subjective and objective olfactory test) உட்படுமாறு கேட்டு கொள்ளப்பட்டனர். மீதமுள்ள 46 பேருக்கு அகநிலை மதிப்பீடு (subjective assessment) மட்டுமே மேற்கொள்ளப்பட்டது. 

இந்த ஆய்வின் போது 51 நோயாளிகள் 49 பேர் 8 மாதங்களில் தங்கள் சுவை மற்றும் வாசனை உணர்வை முழுமையாக திரும்ப பெற்றனர். மற்ற இருவரில் ஒருவருக்கு வாசனை உணர்வு திரும்ப கிடைத்தாலும் அசாதாரணமாக இருந்ததாகவும், ஆய்வு முடியும் வரை மீதமிருந்த ஒருவருக்கு வாசனை உணர்வு திரும்பவே இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக விளக்கமளித்துள்ள ஆய்வாளர் மரியன் ரெனாட், 6 மாத பின்தொடர்தலுடன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுடன் ஒப்பிடுகையில், 1 வருடங்களில் கூடுதலாக 10% மீட்பை மட்டுமே எதிர்பார்க்கலாம் என்று தங்களது கண்டுபிடிப்புகள் மூலம் தெரிய வந்துள்ளதாகவும், இந்த நீண்ட நாள் ஆய்வின் போது சுமார் 85.9% நோயாளிகள் மட்டுமே தங்களது சுவை மற்றும் வாசனை உணர்வை திரும்ப பெற்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

 மேலும் பேசிய மரியன் ரெனாட், கோவிட் -19 தொடர்பான அனோஸ்மியா புற அழற்சியின் காரணமாக இருக்கலாம் என்று குறிப்பிட்டார். காற்றில் காணப்படும் திடமான துகள்கள் மற்றும் திரவ துளிகளின் கலவை உள்ளிட்டவை தொற்று பாதிப்பிற்குள்ளாகும் நபரின் வாசனை இழக்கும் அபாயத்தை இரட்டிப்பாக்குகிறது என்று கூறி உள்ளார். 
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.