மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவைகளுக்கு இன்னும் அனுமதியில்லை.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀


 மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவைகளுக்கு இன்னும் அனுமதியில்லை.

மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்ட பின்னர் அத்தியாவசிய சேவைகளுக்காக ரயில் மற்றும் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்று போக்குவரத்து இராஜங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். 

இதற்கமைவாக அடுத்த வாரம் மாகாணங்களுக்குள் மாத்திரம் பஸ் மற்றும் ரயில் சேவைகள் இடம்பெறும் என்றும் அவர் கூறினார். தற்போதைய கொவிட் 19 வைரசு தொற்று அனர்த நிலை இன்னும் குறைவடையவில்லை என்று இராணுவத்தளபதி எமக்கு அறிவித்துள்ளார். 

கொவிட் 19 வைரசு தொற்று பரவலை தடுக்கும் செயலணியின் தீர்மானம் மாகாணங்களுக்கிடையில் பஸ் அல்லது ரயில் சேவைகள் இடம்பெறக்கூடாது என்பதாகும். இந்த தீர்மானத்தை மதிக்க வேண்டும் என்றும் போக்குவரத்து இராஜங்க அமைச்சர் திலும் அமுனுகம மேலும் தெரிவித்துள்ளார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.