ரஞ்ஜன் திடீரென வைத்தியசாலையில் அனுமதி...

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

ரஞ்ஜன் திடீரென வைத்தியசாலையில் அனுமதி...


முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்க, திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதன்படி ,கராபிட்டி வைத்தியசாலையில் ரஞ்ஜன் ராமநாயக்க அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட ரஞ்ஜன் ராமநாயக்கவிற்கு, நீதிமன்றம் 4 வருட சிறைத் தண்டனை விதித்திருந்தது.

 இந்த நிலையில், ரஞ்ஜன் ராமநாயக்கவிற்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு, ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்திருந்தது. 

மேலும் ,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்ட போதிலும், ரஞ்ஜன் ராமநாயக்கவின் பொதுமன்னிப்பு கோரிக்கை தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை என அறிய முடிகின்றது. 
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.