பீஸ்ட்’ படத்தில் விஜய்யின் அட்டகாச அறிமுக காட்சி!

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

 பீஸ்ட்’ படத்தில் விஜய்யின் அட்டகாச அறிமுக காட்சி! 


பீஸ்ட்’ படத்தில் விஜய்யின் அறிமுகக் காட்சி குறித்த முக்கிய தகவல் கசிந்துள்ளது. 

மாஸ் நடிகர்களின் படங்களில் அறிமுகக் காட்சி என்பது கிளைமாக்ஸ் அளவுக்கு முக்கியமானது. துப்பாக்கி போன்ற சில படங்களில் பாடல் காட்சியுடன் விஜய்யின் அறிமுகக் காட்சி இருந்தது. சில படங்களில் சண்டைக் காட்சி. 

அதிலும், போக்கிரி படத்தில் வரும் விஜய்யின் அறிமுகக் காட்சி இன்றும் அவரது ரசிகர்களுக்கு புல்லரிப்பை ஏற்படுத்தும். ’பீஸ்ட்’ படத்தில் அப்படியொரு சண்டைக் காட்சியை அமைத்துள்ளாராம் இயக்குனர் நெல்சன் திலீப்குமார். 

இந்த அதிரடியான சண்டைக் காட்சியை சண்டை இயக்குனர்கள் அன்பறிவ் (அன்பு - அறிவு) அமைத்துள்ளனர். இவர்கள் தான் கமலின் ’விக்ரம்’ படத்துக்கும் சண்டை இயக்குனர்களாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். 

’பீஸ்ட்’ படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் முடிந்த நிலையில், அடுத்த மாத ஆரம்பத்தில் சென்னையில் ஒரு பாடல் காட்சியை முதலில் எடுக்க உள்ளனர். தெலுங்கில் ’ஆல வைகுந்தபுரமுலு’ படத்தின் நடனங்களை அமைத்த ஜானி மாஸ்டர் இந்தப் பாடல் காட்சிக்கும் நடனம் அமைக்கிறார்.

 அத்துடன், மேலும் சில முக்கிய காட்சிகளை சென்னையில் படமாக்க உள்ளனர். இதற்காக கோகுலம் ஸ்டுடியோவில் பிரமாண்ட அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. 
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.