ஜோ பைடனை சந்திக்க விரும்பவில்லை...
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்திக்க விரும்பவில்லை என, ஈரான் ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள இப்ராஹிம் ரைஸி தெரிவித்துள்ளார்.
அதன்படி ,ஈரான் ஜனாதிபதி ஹசன் ரோஹானி, ஜனாதிபதி பதவியிலிருந்து வரும் ஆகஸ்ட் மாதம் விலக உள்ள நிலையில், 60 வயதான இப்ராஹிம் ரைஸி, இஸ்லாமிய குடியரசு ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளில் எதிர்ப்பை சம்பாதித்து வரும் ஈரான், பொருளாதாரத்தை முன்னுக்குக் கொண்டு வர, இப்ராஹிம் சிறந்த தலைவராக விளங்குவார் என்று அவரது ஆதரவாளர்கள் நம்பி வருகின்றனர்.
ஈரானின் உயரிய தலைவர் அயோடெல்லா அல் கமேனி, அடுத்த மாதம் தனது 82ஆவது பிறந்த நாளைக் கொண்டாட உள்ளார். வயது மூப்பு காரணமாக, இவர் அரசியலில் இருந்து விரைவில் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ,தற்போது, ஈரான் ஜனாதிபதியாக பதவி ஏற்க இருக்கும் இப்ராஹிம் ரைஸி, கமேனியை அடுத்து ஈரானின் உயரிய தலைவராகப் பதவி ஏற்க வாய்ப்புள்ளது என்று, அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன. People News ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.