இலங்கையில் 1.07 சதவீதமாக அதிகரித்துள்ள கொவிட் மரணங்கள்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

 இலங்கையில் 1.07 சதவீதமாக அதிகரித்துள்ள கொவிட் மரணங்கள்.


இலங்கையில் கொரோனா மரணங்களின் அதிகரிப்பு வேகமானது சதவீத அடிப்படையில் ஒரு சதவீதத்தைக் கடந்துள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியத்தின் தரவுகளின் படி, நாட்டில் கொவிட் மரணங்கள் சதவீதம் 1.07 ஆக அதிகரித்துள்ளது. 

சர்வதேச ரீதியில் 40 இலட்சத்துக்கும் அதிகமானோர் கொவிட்-19 தொற்றினால் இதுவரையில் மரணித்துள்ளனர். இது சதவீத அடிப்படையில் 2.17 சதவீதமாக பதிவாகியுள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் தரவுகளின்படி, சர்வதேச ரீதியில் பிரேஸில் நாட்டிலேயே கொரோனா மரண சதவீதம் அதிக அளவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

5 இலட்சத்துக்கும் அதிகமான மரணங்கள் பதிவாகி உள்ள பிரேஸிலில் மரணங்களின் சதவீதம் 2.8 ஆக பதிவாகியுள்ளது 386,740 மரணங்கள் இடம்பெற்றுள்ள இந்தியாவில், மரணங்களின் சதவீதம் 1.29 ஆக பதிவாகியுள்ளது. அமெரிக்காவில் 617,009 மரணங்கள் பதிவாகி உள்ள நிலையில், அங்கு மரணங்களின் சதவீதம் 1.79 ஆக பதிவாகியுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது. ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.