பாரிய இருப்பு தொழிற்சாலையில் பலருக்கு கொரோனா தொற்று உறுதி - கொரோனா கொத்தணி உருவாகும் அபாயம்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

பாரிய இருப்பு தொழிற்சாலையில் பலருக்கு கொரோனா தொற்று உறுதி - கொரோனா கொத்தணி உருவாகும் அபாயம். 


வத்தளை, ஹேகித்த பிரதேசத்திலுள்ள பாரிய இரும்பு உற்பத்திச் செய்யும் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களில் 128 பேருக்கு ​கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

 “முன்னெடுக்கப்பட்ட ரெபிட் அன்டிஜன் பரிசோதனையின் போதே, இவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதியானது” என, வத்தளை சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவின் மக்கள் சுகாதார பரிசோதகர் வருண அமரசேகர தெரிவித்துள்ளார். ​

அங்கு பணியாற்றும் ஊழியர்களில் 194 பேருக்கு பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. என்பதுடன், அந்த கைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களில் 92 பேர் இந்தியப் பிரஜைகள் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. 

இதேவேளை, அந்த இரும்பு கைத்​தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இனங்காணப்பட்டவர்கள் கிசிச்சை மத்திய நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். ஏனையோர், அந்த கைத்தொழிற் சாலைக்குள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளனர்.

 இந்தியாவில் பிரபல்யம் வாய்ந்த நிறுவனத்தின் இணை நிறுவனமாக, இந்த தொழிற்சாலை கடந்த பல வருடங்களாக, வத்தளை-ஹேகித்த பிரதேசத்தில் இயங்கிவருகின்றது.. ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியப் பிரஜைகள் என்பதும் இங்கும் குறிப்பிடத்தக்கது. ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.