June 18, 2021 at 08:57AM

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 தென்னாப்பிரிக்க நாடுகளில் ஒன்றான போட்ஸ்வானாவில் கண்டெடுக்கப்பட்ட வைரம், உலகிலேயே மூன்றாவது பெரிய வைரமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. 2 வாரங்களுக்கு முன் கண்டு பிடிக்கப்பட்ட வைரத்தை அந்த நாட்டின் அதிபர் மோக்விட்சி கையில் வைத்திருக்கும் புகைப்படம் வெளியாகி இருக்கிறது. இதன்படி ,1098 காரட் கொண்ட வைரத்தை அரசு மற்றும் டிபியர்ஸ் நிறுவனம் இணைந்து கண்டுபிடித்துள்ளது. இந்த வைரம் 73 மில்லி மீட்டர் நீளம், 52 மில்லி மீட்டர் அகலம், 27 மில்லி மீட்டர் தடிமனுடன் காணப்படுகிறது. மேலும் இதன் விலை மற்றும் விற்பது குறித்து இன்னும் அரசு தரப்பில் முடிவு எடுக்கப்படவில்லை. உலகின் 2வது பெரிய வைரமான லெஸ்டி லா ரானா 2015 ஆம் ஆண்டு போட்ஸ்வானாவில் தான் கண்டெடுக்கப்பட்டது. போட்ஸ்வானா நாட்டின் 80 சதவீத வருமானம் அரசுக்கு சொந்தமான டெப்ஸ்வானா வைர சுரங்க நிறுவனம் மூலம் கிடைக்கிறது. People News ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.