தேசிய விருது பெற்ற இந்த பிரபல இயக்குனருடன் இணைகிறாரா ஆர்ஜே பாலாஜி.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 


தேசிய விருது பெற்ற இந்த பிரபல இயக்குனருடன் இணைகிறாரா ஆர்ஜே பாலாஜி.

’எல்கேஜி’ மற்றும் ’மூக்குத்தி அம்மன்’ ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கி நடித்த ஆர்ஜே பாலாஜி தற்போது பாலிவுட் படம் ஒன்றில் ரீமேக்கை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். 

பாலிவுட்டில் சூப்பர்ஹிட்டான ஆயுஷ்மான் குரானா நடித்த ’பதாய் ஹோ’ என்ற திரைப்படத்தின் ரீமேக்கில் ஆர்கே பாலாஜி இயக்கி நடித்து வருவதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் ஒரே ஷெட்யூலில் முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது இந்த படத்தை போனிகபூர் தயாரிக்கவுள்ளார் என்பதும், இந்த படத்திற்கு வீட்ல விசேஷங்க என்ற டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாகவும் இதற்காக பாக்யராஜிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டது இந்த நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக அவர் இயக்குனர் ராமுடன் இணைய உள்ளதாக தெரிகிறது. 

இயக்குனர் ராம் கூறிய கதை ஒன்று ஆர்ஜே பாலாஜிக்கு மிகவும் பிடித்து விட்டதாகவும் இதனை அடுத்து அவரது இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும் இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. பிரபல இயக்குனர் ராம் கடந்த 2019ஆம் ஆண்டு ’பேரன்பு’ என்ற திரைப்படத்தை இயக்கினார் என்பது தெரிந்ததே. ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.