நாடு திறக்கப்பட்டாலும் கட்டுப்பாடுகள் நீடிக்கும் - சுதர்சினிபெர்ணான்டோபுள்ளே

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀


 நாடு திறக்கப்பட்டாலும் கட்டுப்பாடுகள் நீடிக்கும் - சுதர்சினிபெர்ணான்டோபுள்ளே

போக்குவரத்து கட்டுப்பாடுகள் ஒரு கட்டத்தில் நீக்கப்பட்டாலும் நோயாளிகள் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அறவிற்கு குறைவடையும் வரை பொதுமக்கள் ஒன்றுகூடுவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார். தற்போதைய போக்குவரத்து கட்டுப்பாடுகளின் பலாபலன்களை அனுபவிப்பதற்கு சிறிது காலம் எடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

அதுவரை கட்டுப்பாடுகள் நீடிக்கும் என அவர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ள போதிலும் உயிரிழப்புகள் குறைவடைவதற்கு இன்னமும் இரண்டு மூன்று வாரங்களாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 மருத்துவதுறைசார்ந்தவர்களும் இந்த விடயத்தில் தொடர்புபட்ட ஏனையவர்களும் விடுத்த வேண்டுகோளை தொடர்ந்தே அரசாங்கம் போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானித்தது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 தற்போதைய நிலையை கருத்திலெடுத்த பின்னரே போக்குவரத்து கட்டுப்பாடுகளை நீடிப்பது குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டாலும் நோயாளர்கள் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் குறைவடையும் வரை பொதுமக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகளிற்னு அனுமதி வழங்கப்படாது என சுதர்சினிபெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.