July 01, 2021 at 09:10AM

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 


அரச மருத்துவர்கள் ஓய்வு பெறும் வயதெல்லை நீடிப்பு. 

அரச சேவையில் பணியாற்றும் அனைத்து தரத்திலுமுள்ள மருத்துவ அதிகாரிகளின் ஓய்வூதியம் பெறும் வயதை 63 ஆக நீடித்து அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.

 அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனினால், இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவித்தல் மூலம் ஓய்வூதியப் பிரமாணக் குறிப்பில் செய்யப்பட்ட திருத்தம் கடந்த ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி முதல் நடைமுறைக்குவரும் என வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 முன்னதாக அரச சேவையில் பணியாற்றும் மருத்துவ அதிகாரிகளின் ஓய்வுபெறும் கட்டாய வயதெல்லை 61 ஆக இருந்த நிலையில், அந்த வயதெல்லை 63 ஆக நீடிக்கப்பட்டுள்ளது.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.