பாண் விலையை 10 ரூபாவால் அதிகரிக்குமாறு கோரிக்கை*
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
பாண் விலையை 10 ரூபாவினால் அதிகரிக்குமாறு அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் கோதுமை மா விநியோகிக்கும் இரண்டு பிரதான நிறுவனங்களில் ஒரு நிறுவனம், ஒரு கிலோ மாவின் விலையை 18 ரூபாவினால் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக தாங்கள் அசௌகரியத்தை எதிர்நோக்கியுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
எனவே அரசாங்கம் இந்த விடயத்தில் தலையீடு செய்து 10 ரூபாவை விடவும் குறைந்த விலையிலாவது பாணின் விலையை அதிகரித்து, தமது பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.