நாங்கள் கடினமாக உழைத்தால் மட்டுமே வளர முடியும்."

"நாங்கள் கடினமாக உழைத்தால் மட்டுமே வளர முடியும்." 


கொரோனா நெருக்கடியின் தொடக்கத்தில் இருந்து, இதுவரை
 அரசாங்கம் 260 பில்லியன் ரூபாய்க்கு மேல் நிவாரணத்திற்காக செலவிட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 
இன்று இரவு 8.30 மணி அளவில் நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை ஆற்றிய போது ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். 
தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, 
"இந்த நேரத்தில் மிகவும் கடுமையான பிரச்சினை ​கொவிட் -19 உலகளாவிய தொற்று நோயாகும். 


தற்போதைய நிலையில் தனது மக்களுக்காக எந்தவித தடுப்பூசியையும் பெற்றுக் கொடுக்க முடியாத நாடுகள் கூட உள்ளன. 

தடுப்பூசியை இலங்கைக்கு இறக்குமதி செய்வதில் நான் விசேட ஆர்வம் காட்டினேன். 

நம் நாட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். 

நாட்டின் எதிர்காலத்திற்கான நம்பிக்கையுடன் மக்கள் என்னைத் தேர்ந்தெடுத்தனர். 

எத்தனை பிரச்சினைகளை எதிர்கொண்டாலும், அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற நான் கடமைப்பட்டுள்ளேன். 

எனக்கு வாக்களித்த 69 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் முக்கிய நோக்கம் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதாகும். " 
"கொவிட் பரவலை கட்டுப்படுத்த பயணக் கட்டுப்பாடு விதித்து, சுகாதார ஆலோசனையைப் பின்பற்றுமாறு மக்களுக்கு எவ்வளவு அறிவுறுத்தப்பட்டாலும், சில பொது மக்கள் அதை கடைப்பிடிக்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியும். 
பல புதிய செலவுகளை அரசாங்கம் ஏற்க வேண்டியிருந்தது. 


கொரோனா காரணமாக அரசாங்கம் பல கூடுதல் செலவுகளைச் செய்கிறது. 
கொரோனா நெருக்கடியின் தொடக்கத்தில் இருந்து, இதுவரை அரசாங்கம் 260 பில்லியன் ரூபாய்க்கு மேல் நிவாரணத்திற்காக செலவிட்டுள்ளது. 

கொரோனா செலவினம் திட்டமிடப்பட்ட நிவாரணங்களுடன் சேர்க்கப்படும் போது, ​​இது கடந்த ஆண்டு நாட்டின் மொத்த அரசாங்க வருவாயான 1,380 பில்லியன் ரூபாயில் பாதி ஆகும். " 
கொழும்பு துறைமுக நகரத்தின் புதிதாக சேர்க்கப்பட்ட 269 ஹெக்டேருக்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் வாய்ப்பு தற்போது எழுந்துள்ளது. 

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகு, 100% இலங்கையர்களைக் கொண்ட ஒரு ஆணைக்குழுவை நியமித்தேன். 
முதலாவது முதலீடாக 400 மில்லியன் டொலர் முதலீட்டில் இரண்டு கோபுரங்களுடன் கூடிய வர்த்தக கட்டிடத்திற்கு அமைச்சரவை மற்றும் பாராளுமன்ற நிதிக் குழு ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது. ” 

"நாங்கள் கடினமாக உழைத்தால் மட்டுமே வளர முடியும்." 

"ஜனாதிபதி பிரச்சாரத்தின் போது எனக்கு ஆதரவளித்த பலர், நாட்டிற்கு முதலிடம் கொடுக்கும் ஒரு தலைமையை என்னிடம் கோரினர். 

ஆனால் நான் ஆட்சிக்கு வந்த பிறகு, தனிப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாததற்காக சிலர் அரசாங்கத்தின் மீது கோபமடைந்தனர். 

அவர்கள் இப்போது அரசாங்கத்தை விமர்சித்து வருகின்றனர். 
ஆனால் நான் விரும்புவது ஒரு சிலரைப் பிரியப்படுத்த எனது கொள்கைகளை மாற்றுவதல்ல, மாறாக நான் உறுதியளித்த சௌபாக்கிய நோக்கு வேலைத்திட்டத்தினை செயல்படுத்துவதாகும். 


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.