வரலாற்றில் இன்று – 29.06.2021 ஜூன் 29 கிரிகோரியன் ஆண்டின் 180 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 181 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 185 நாட்கள் உள்ளன.

 வரலாற்றில் இன்று – 29.06.2021


ஜூன் 29  கிரிகோரியன் ஆண்டின் 180 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 181 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 185 நாட்கள் உள்ளன.


இன்றைய தின நிகழ்வுகள்.


👉1534 – பிரின்ஸ் எட்வேர்ட் தீவு சாக் கார்ட்டியே என்ற ஐரோப்பியரால் கண்டுபிடிக்கப்பட்டது.

👉1613 – லண்டனில் உள்ள குளோப் நாடகமாளிகை தீயில் எரிந்து அழிந்தது.

👉1786 – அலெக்சாண்டர் மாக்டொனெல் மற்றும் 500 கத்தோலிக்கர்கள் ஸ்கொட்லாந்தில் இருந்து சென்று ஒண்டாரியோவின் கிளென்கரி என்ற ஊரில் குடியேறினர்.

👉1814 – மெதடிஸ்த திருச்சபையைச் சேர்ந்த ஆறு மதப்பரப்புனர்கள் இலங்கையின் காலி நகரை வந்தடைந்தனர்.

👉1850 – வான்கூவர் தீவில் நிலக்கரி கண்டுபிடிக்கப்பட்டது.

👉1864 – கனடாவில் கியூபெக்கில் தொடருந்து விபத்தில் 99 பேர் கொல்லப்பட்டனர்.

👉1880 – பிரான்ஸ் டெஹீட்டி தீவைக் கைப்பற்றியது.

👉1888 – ஜோர்ஜ் எடுவார்ட் கவ்ராட் என்பவர் ஆண்டெலின் எகிப்தில் இசுரேல் என்ற ஆக்கத்தை கிராமபோன் உருளை ஒன்றில் பதிவு செய்தார்.

👉1895 – சாரின் உருசியப் அரசின் படைக்குக் கட்டாய ஆளெடுக்கும் நடவடிக்கையைக் கண்டித்து டுகோபார் தமது ஆயுதங்களை எரித்தனர்.

👉1904 – மொஸ்கோவில் இடம்பெற்ற சூறாவளியினால் சுமார் 1.500 வீடுகள், கட்டடங்கள் அழிந்தன.

👉1914 – கிரிகோரி ரஸ்புட்டீன் சைபீரியா நகரில் உள்ள அவரது வீட்டில் இடம்பெற்ற கொலை முயற்சி ஒன்றில் தப்பினார்.

👉1925 – கலிபோர்னியாவில் 6.3 நிலநடுக்கம் ஏற்பட்டதில் சாண்டா பார்பரா என்ற இடம் முற்றாக அழிந்தது.

👉1976 – சீசெல்சு ஐக்கிய இராச்சியத்தில் இருந்து விடுதலை அடைந்தது.

👉1995 – அட்லாண்டிஸ் விண்ணோடம் ரஷ்யாவின் மீர் விண்வெளி நிலையத்துடன் முதற்தடவையாக இணைந்தது.

👉1995 – தென் கொரியாவின் சியோலில் சம்பூங் பல்பொருள் அங்காடி இடிந்து வீழ்ந்ததில் 501 பேர் கொல்லப்பட்டு 937 பேர் படுகாயமடைந்தனர்.

👉2002 – தென் கொரியாவுக்கும் வட கொரியாவுக்கும் இடையில் இடம்பெற்ற கடல் மோதலில் ஆறு தென் கொரிய மாலுமிகள் கொல்லப்பட்டு ஒரு வட கொரியக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது.

👉2007 – ஆப்பிள் நிறுவனம் தனது முதலாவது கைப்பேசி ஐ-போனை வெளியிட்டது.


இன்றைய தின பிறப்புகள்.


👉1945 – சந்திரிகா குமாரதுங்க, இலங்கையின் நான்காவது அதிபர்

👉1981 – ஜோ ஜான்சன், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்

👉1925 – ஜார்ஜியோ நபோலிடானோ, 11வது இத்தாலிய அரசுத்தலைவர்

👉1978 – நிக்கோல் செர்சிங்கர், அமெரிக்கப் பாடகர், நடிகை.

👉1973 - கார்த்திக் ராஜா தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்.

👉1990 - ஹரீஷ் கல்யாண் தமிழ்த் திரைப்பட நடிகர்.


இன்றைய தின இறப்புகள்.


👉2009 – வ. ஐ. சுப்பிரமணியம், மொழியியல் அறிஞர் (பி. 1926)


இன்றைய தின சிறப்புகள்.


👉சீசெல்சு – விடுதலை நாள் (1976)

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.