வரலாற்றில் இன்று – 21.06.2021 ஜூன் 21 கிரிகோரியன் ஆண்டின் 172 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 173 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 193 நாட்கள் உள்ளன.

 வரலாற்றில் இன்று – 21.06.2021

ஜூன் 21 கிரிகோரியன் ஆண்டின் 172 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 173 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 193 நாட்கள் உள்ளன.



இன்றைய தின நிகழ்வுகள்.


👉1621 – பிராக் நகரில் 27 உயர்குடி செக் இனத்தவர்கள் தூக்கிலிடப்பட்டனர்.

👉1734 – கியூபெக்கில் மொண்ட்றியால் நகரில் மரீ-ஜோசெப் அஞ்சலிக் என்ற கறுப்பின அடிமைப்பெண், அவளது எசமானின் வீட்டைத் தீயிட்டுக் கொழுத்தியமைக்காகவும், அதனால் நகரின் பெரும் பகுதி அழிந்தமைக்காகவும் குற்றம் சாட்டப்பட்டு மக்கள் மத்தியில் சித்திரவதை செய்யப்பட்டுத் தூக்கிலிடப்பட்டாள்.

👉1788 – நியூ ஹாம்சயர் ஐக்கிய அமெரிக்காவின் 9வது மாநிலமாக இணைந்தது.

👉1798 – ஐரியத் தீவிரவாதிகளின் எழுச்சி பிரித்தானியாவினால் முறியடிக்கப்பட்டது.

👉1898 – குவாம் தீவை ஐக்கிய அமெரிக்கா ஸ்பெயினிடம் இருந்து கைப்பற்றியது.

👉1940 – இரண்டாம் உலகப் போர்: பிரான்ஸ் ஜெர்மனியிடம் வீழ்ந்தது.

👉1942 – இரண்டாம் உலகப் போர்: லிபியாவின் டொப்ரூக் நகரம் இத்தாலி, மற்றும் ஜெர்மனியப் படைகளிடம் வீழ்ந்தது.

👉1945 – இரண்டாம் உலகப் போர்: ஒகினவா சண்டை முடிவுற்றது.

👉1970 – பிரேசில் இத்தாலியை 4-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து உதைபந்தாட்ட உலகக் கிண்ணத்தை வென்றது.

👉 1990 – மன்னாரில் கொண்டச்சி இராணுவ முகாம் விடுதலைப் புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டது.

👉1999 – அப்பிள் கணினி நிறுவனம் தனது முதல் iBook இனை வெளியிட்டது.

👉2002 – உலக சுகாதார நிறுவனம் ஐரோப்பாவை போலியோ நோய் அற்ற கண்டமாக அறிவித்தது.

👉2004 – விண்கப்பல் ஒன்று (SpaceShipOne) தனது முதலாவது தனியாரினால் ஆதரவளிக்கப்பட்ட விண்பயணத்தை முடித்துக்கொண்டது.

👉2006 – புளூட்டோவின் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட துணைக்கோள்கள் நிக்ஸ் மற்றும் ஹைட்ரா எனப் பெயரிடப்பட்டது.


இன்றைய தின பிறப்புகள்


👉1905 – ஜான் பவுல் சாட்டர், பிரெஞ்சு எழுத்தாளர், தத்துவவாதி, நோபல் பரிசு பெற்றவர் (இ. 1980)

👉1947 – ஷிரின் எபாடி, நோபல் பரிசு பெற்ற ஈரானியர்.

👉1945 - தியாகராஜன்,தமிழ்த் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர்.

👉1953 – பெனாசிர் பூட்டோ, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்.

👉1971 - ஆர் கண்ணன், இந்திய திரைப்பட இயக்குனர் மற்றும் வசன எழுத்தாளர்.

👉1984 - ஷிவ் பாண்டே இந்திய திரைப்பட நடிகர்.


இன்றைய தின இறப்புகள்.


👉1970 – சுகர்னோ, இந்தோனீசியாவின் அதிபர் (பி. 1901)

👉2001 – கே. வி. மகாதேவன், இசையமைப்பாளர் (பி. 1918)


இன்றைய தின சிறப்புகள்.


👉உலக இசை தினம்.

👉கனடா – தேசிய பழங்குடிகள் நாள்.

👉கிறீன்லாந்து – தேசிய நாள்.

👉பன்னாட்டு யோகா நாள்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.