வரலாற்றில் இன்று – 16.06.2021 ஜூன் 16 கிரிகோரியன் ஆண்டின் 167 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 168 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 198 நாட்கள் உள்ளன.

 வரலாற்றில் இன்று – 16.06.2021



ஜூன் 16 கிரிகோரியன் ஆண்டின் 167 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 168 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 198 நாட்கள் உள்ளன.


இன்றைய தின நிகழ்வுகள்.


👉1745 – பிரித்தானியர் கேப் பிறெட்டன் தீவை பிரெஞ்சுப் படைகளிடம் இருந்து கைப்பற்றினர். இது தற்போது கனடாவின் ஒரு பகுதியாகும்.

👉1779 – ஸ்பெயின் பெரிய பிரித்தானியாமீது போரை அறிவித்தது. கிப்ரால்ட்டர் மீதான முற்றுகை ஆரம்பமானது.

👉1819 – குஜராத்தில் இடம்பெற்ற 8.0 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 2000 பேர் மாண்டனர்.

👉1883 – இங்கிலாந்தில் விக்டோரியா அரங்கில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 183 சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.

👉1897 – ஹவாய்க் குடியரசை ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கும் உடன்பாடு எட்டப்பட்டது.

👉1911 – விஸ்கொன்சின் மாநிலத்தில் 772 கிராம் விண்கல் வீழ்ந்ததில் களஞ்சியம் ஒன்று சேதமடைந்தது.

👉1940 – லித்துவேனியாவில் கம்யூனிச ஆட்சி உருவானது.

👉1963 – உலகின் முதலாவது பெண் விண்வெளி வீரர் ரஷ்யாவின் வலன்டீனா டெரெஷ்கோவா வஸ்தோக் 6 விண்கலத்தில் பயணமானார்.

👉1976 – தென்னாபிரிக்காவில் சுவெட்டோவில் 15,000 கறுப்பின மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் காவற்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 566 மாணவர்கள் கொல்லப்பட்டனர்.

👉1964 – லியோனிட் பிரெஷ்னேவ் சோவியத் ஒன்றியத்தின் அதிபரானார்.

👉1983 – யூரி அந்திரோப்பொவ் சோவியத் ஒன்றியத்தின் அதிபரானார்.

👉1994 – சீன விமானம் TU-154 புறப்பட்டுப் 10 நிமிடங்களில் வெடித்ததில் 160 பேர் கொல்லப்பட்டனர்.


இன்றைய தின பிறப்புகள்.


👉1971 – டூபாக் ஷகூர், அமெரிக்காவின் ராப் இசைக் கலைஞர்.

👉1966 - சரண் தமிழ் திரைப்பட இயக்குனர்.

👉1981 - ராகுல் நம்பியார் இந்திய திரைப்பட பாடகர்.

👉1986 - அஞ்சலி தமிழ் திரைப்படங்களில் நடித்து வரும் ஓர் இந்திய நடிகை மற்றும் விளம்பர முன்னாளர்.

👉1990 - தீபா சந்நிதி இந்திய திரைப்பட நடிகையவார்.


இன்றைய தின இறப்புகள்


👉1925 – சித்தரஞ்சன் தாஸ், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1870)


இன்றைய தின சிறப்புகள்.


தென்னாபிரிக்கா – இளைஞர் நாள் 👉(1976)

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.