இலங்கையில் இன்று மேலும் 07 பேர் பலி

இலங்கையில் இன்று மேலும் 07 பேர் பலி.

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 7 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தற்போது (02) அறிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்கனவே 476 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 7 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை 483 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

இவ்வாறு அறிவிக்கப்பட்டவர்களில் மூவர் இன்றும் (02), நால்வர் நேற்றும் (01) மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் விபரம்.

👉01. கொழும்பு 15 (மோதறை/ மட்டக்குளி) பிரதேசத்தைச் சேர்ந்த, 87 வயதான பெண்.

👉02. கொழும்பு 05 நாரஹேன்பிட்டி) பிரதேசத்தைச் சேர்ந்த, 89 வயதான பெண்.

👉03. கொழும்பு 15 (மோதறை/ மட்டக்குளி) பிரதேசத்தைச் சேர்ந்த, 78 வயதான பெண்.

👉04. பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த, 73 வயதான ஆண்.

👉05. பிலிமத்தலாவை பிரதேசத்தைச் சேர்ந்த, 63 வயதான பெண்.

👉06. கொழும்பு 02 (கொம்பனித்தெரு/ யூனியன் பிளேஸ்) பிரதேசத்தைச் சேர்ந்த, 63 வயதான ஆண்.

👉07. கலேவல பிரதேசத்தைச் சேர்ந்த, 63 வயதான ஆண்.

மேலும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் இன்று (02) மேலும் 498 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 80,020 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.