கொழும்பை மூடுமாறு கோரிக்கை...

 கொழும்பை மூடுமாறு கோரிக்கை.

கொழும்பு மாநகர சபை அதிகாரப் பிரதேசத்தை, குறைந்த பட்சம் மூன்று வார காலத்துக்காவது மூட வேண்டும் என கொழும்பு மாநகர மேயர் ரோஷி சேனாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்படி கொழும்பு நகர சபை அதிகார பிரதேசத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவற்காக தீவிர நடவடிக்கை களை எடுக்க வேண்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

´கொரோனாவுடன் வாழ்வது என்பது கொரோனா இரண்டாம் அலையுடன் வாழ்வதென்று பொருட்படாது. கொரோனாவுடன் வாழ வேண்டும் என்றால் இரண்டாவது அலையை கட்டாயம் கட்டுப்படுத்தியாக வேண்டும்.

அதற்கமைய கடுமையான பயணக்கட்டுப்பாடுகளை விதித்து நகரத்தை கடும் நிர்வாகத்துக்கு கீழ் கொண்டுவந்து எவருக்கும் நகரத்தினுள் பிரவேசிப்பதற்கும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து எவரும் வெளியேராத வகையில் கடும் நிர்வாகத்தின் கீழ் இதனை கட்டுப்படுத்தவில்லை என்றால் ஒரு பெரிய பேரழிவுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்றும் தெரிவித்தார்.

கொழும்பு நகர சபை எல்லைக்குள் வசிக்கும் வயோதிபர்களின் எண்ணிக்கை அதிகம். அவர்களை காப்பாற்ற முடியுமா என்பதும் இன்று ஒரு பிரச்சினையாகியுள்ளது.

மேலும் ,வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு எவ்வளவு கூறினாலும், குடிசைவாசிகளுக்கு அவ்வாறு செய்வது அவசியமற்றது. அவ்வாறு செய்வதாயின் இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கம் கடுமையான நிர்வாகத்தின் கீழ் செயற்பட வேண்டும். 

14 அல்லது 21 நாள்கள் முடக்கி இதனை கட்டுப்படுத்தவில்லை என்றால் ஆபத்தான சூழலை எதிர்க்கொள்ள வேண்டியேற்படும்´ என்றார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.