பிச்சைக்காரர்களுக்கு பணம் வழங்கினால் இனிமேல் தண்டணை

பிச்சைக்காரர்களுக்கு பணம் வழங்கினால் இனிமேல் தண்டணை.



வீதி சமிக்ஞைகளுக்கு அருகில் பிச்சைக்காரர்களுக்கு பணம் வழங்கும் சாரதிகள் மற்றும் பயணிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இன்று பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன கூறுகையில் சம்பளத்திற்கு வேலைக்குச் சேர்ந்த பின்னர் சில நபர்கள் பிச்சை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

சில குழுக்கள் இவ்வாறு ஒரு புதிய திட்டத்துடன் இவ்வாறு வீதியோரங்களிலும் வீதி சமிக்ஞைகளுக்கு அருகிலும் இவர்களை பிச்சை எடுப்பதற்காக கட்டாயப்படுத்தியுள்ளனர்.

இதுபோன்ற பிச்சைக்காரர்களை அடையாளம் காண பொலிஸ் திணைக்களம் முயன்று வருவதாகக் குறிப்பிட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சட்ட நடவடிக்கைகளைத் தொடங்க இதுபோன்ற பிச்சைக்காரர்களுக்கு பணம் வழங்க வேண்டாம் எனவும் அந்த சட்டத்தினை மீறி பணம் வழங்கும் ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் குற்றம் செய்ததாகக் கருதப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.