பிஞ்சு நெஞ்சம் பேசுகிறது..

பிஞ்சு நெஞ்சம் பேசுகிறது..

கற்ற ஆசான்கள் நீங்கள்...

வளர்ந்த முதியோர் நீங்கள்....

நீங்களே தோல்வியைக் கண்டு அஞ்சும் போது...

துவண்டு ஓடும் போது...

நம் பிஞ்சு நெஞ்சங்கள் மாத்திரம்...

எப்படித் தாங்கும் தோல்வியை...

என்ன பரீட்சையடா இது???

எனக் கேட்கத் தோன்றுகிறது மேதைகளிடம்...

பத்து வயது நிரம்பாத பாலகர் நெஞ்சில்...

முடியாது என்ற சிந்தனையை விதைக்கிறீர்களே..

அண்ணா, அக்காமாரகளுக்கெல்லாம்...

35 புள்ளிகள் பெற்றால் சித்தியாமே???

எங்களுக்கு மட்டும் ஏனோ 80 புள்ளிகளுக்கும் தோல்வி???

ஆசையோடு முன்பள்ளியில்

காலடி வைத்த நாள் முதல்.....

என் ஆசைகள் அத்தனையும் மறந்து..

என் தேவைகள் அத்தனையையும் துறந்து...

உம் ஆசை நிறைவேற்ற

ஓயாது ஓடினேன்...

இறுதியில் சிறப்புச் சித்தி பெறும் புள்ளியுடனும்..

தோல்வி என்ற பேருடனும்.. 

திரும்பிப் பார்க்கிறேன்....

ஓடி ஆடித் திரிய வேண்டிய என் சிறுவயது....

பள்ளி அறைகளுக்குள்ளும்,

மாலைநேரம் வகுப்புக்குள்ளும்,

 மேலதிக பயிற்சி என்றும்...

சிறை பிடிக்கப் பட்டு

தொலைந்து விட்டன...

சொல்லுங்கள் அப்பா...

நான் தோல்வி அடைந்து விட்டேனா??

சொல்லுங்கள் அம்மா...

நான் தோல்வி அடைந்து விட்டேனா??

சொல்லுங்க டீச்சர்... 

நான் தோல்வி அடைந்து விட்டேனா??

புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடையாத....

எம் அண்ணாமார்கள் வைத்தியர் ஆகவில்லையா?

பொறியியலாளரெல்லாம் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்தவர்களா?

சித்தியடையாத என் அக்கா ஆசிரியர் ஆகவில்லையா???

சொல்லுங்கள் அம்மா...

என்னைக் கட்டியணைத்து முத்தமிட்டு சொல்லுங்கள்...

இந்த உலகில் நீதான் கெட்டிக்காரன் என்று...

சொல்லுங்கள்...

நீ வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவாய் என்று..

சொல்லுங்கள்..

உன்னால் முடியும் என்று

சொல்லுங்கள்...

பெறுபேறுகள் என்ன சொன்னால் என்ன

நீதான் வெற்றியாளன் என்று..

உங்கள் வார்த்தையில் இருக்கிறது எம் வெற்றி..

நீங்கள் தரும் நம்பிக்கையில் இருக்கிறது எம் எதிர்காலம்..

அன்பின் ஆசான்களே, பெற்றோர்களே 

பிஞ்சு வயதில் பிள்ளைகளின் மனதில் முடியாது, தோல்வி என்ற எண்ணங்களை விதைத்து விடாதீர்கள். 

அவர்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு வலுவூட்டுங்கள். 

   நன்றி!

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.