மகிந்த தேசப்பிரியவுக்கு வழங்கப்படவுள்ள புதிய பதவி?

மகிந்த தேசப்பிரியவுக்கு வழங்கப்படவுள்ள புதிய பதவி?

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து ஓய்வுபெறவுள்ள மகிந்த தேசப்பிரிய, தேர்தல் தொகுதி எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் தலைவராக நியமிக்கப்படலாம் என அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் தலைவராக உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் ஈவா வனசுந்தர நியமிக்கப்பட உள்ளார்.அரச சேவை ஆணைக்குழுவின் தலைவராக முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் டி.ஜே.டி.எஸ். பாலபட்டபெந்தி நியமிக்கப்பட உள்ளார்.

அரச நிதி ஆணைக்குழுவின் தலைவராக அமைச்சரவையின் முன்னாள் செயலாளர் சுமித் அபேசிங்கவும், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவராக சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவாவும், மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவராக முன்னாள் ஆளுநரான கலாநிதி ஜயத் பாலசூரியவும் நியமிக்கப்பட உள்ளதாக அரசாங்கத்தின் உட்தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.

மேலும் ,இந்த நியமனங்கள் நாளைய தினம் வழங்கப்படலாம் எனவும் அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.