அடக்கம் செய்யும் விவகாரம் குறித்து சுகாதார அமைச்சரின் கருத்து.

அடக்கம் செய்யும் விவகாரம் குறித்து சுகாதார அமைச்சரின் கருத்து.

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களை புதைப்பதற்கு அனுமதி வழங்குவதா அல்லது இல்லையா என்பது தொடர்பாக சுகாதார அமைச்சு இவ்வாரம் உறுதியான தீர்மானமொன்றை எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி கொரோனா வைரஸ் தொற்றினால் இறக்கும் முஸ்லிம்களை புதைக்க அனுமதி வழங்கப்பட்டதாக சமீபத்தித்தில் சமூக வலைத்தளங்களில் வெளியான செய்தி பரவலாக பேசப்பட்டது.

அரசாங்கத்தை சேர்ந்த சிலர், இவ்விடயத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது என கூறினர். அதேபோன்று அரசாங்கத்தை சேர்ந்த மற்றுமொரு தரப்பினர் அனுமதி வழங்கவில்லை என கூறியுள்ளனர்.

அந்நிலையிலேயே இவ்விடயம் தொடர்பாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளதாவது, “கொரோனா மரணங்களை புதைப்பது தொடர்பில் அமைச்சரவையில் கருத்து பரிமாறப்பட்டது.

இவ்விடயம் தொடர்பாக இறுதி தீர்மானம் எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை. சம்மந்தப்பட்ட தொழில்நுட்ப குழுவுடன் கலந்துரையாடி முடிவு எடுக்குமாறு எனக்கு அறிவிக்கப்பட்டது.

மேலும் அதனுடன் தொடர்புள்ள தொழில்நுட்ப குழுவின் சில அறிக்கைகள், எனக்கு கிடைக்க வேண்டியுள்ளது. அந்த பரிந்துரைகள் கிடைத்ததும் இது தொடர்பில் இறுதி முடிவு எடுக்க இருக்கின்றோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.