தரமான கோவிட் 19 தடுப்பூசி தயார் : பாதிக்கப்பட்ட மக்களுக்கு நற்செய்தி!

தரமான கோவிட் 19 தடுப்பூசி தயார் : பாதிக்கப்பட்ட மக்களுக்கு நற்செய்தி!


கோவிட் 19 தொற்றினால் பாதிக்கப்பட்ட அனைவரும் தராதரம் பாராது பயன்படுத்தக்கூடிய தடுப்பூசியை மொடெர்னா (moderna) நிறுவனம் தயாரித்துள்ளது.

கோவிட் பெருந்தொற்று காரணமாக மனித இனமே கடந்த ஒரு வருடமாக போராடி வருகின்றது. 

இந்த கொடிய நோயால் லட்சக்கணக்கான உயிர்களை காவுகொடுத்து விட்ட நிலையில், கொரோனா வைரஸை தடுக்க தடுப்பூசி மட்டுமே ஒரே வழி என்பது உறுதியாகிவிட்டது.

அண்மையில் அமெரிக்காவை சேர்ந்த ஃபைசர் நிறுவனம் தனது கோவிட்-19 தடுப்பூசி வைரஸை கட்டுப்படுத்துவதில் 90% திறனுடன் இருப்பதாக தெரிவித்தது. 

இதையடுத்து ஃபைசர் தடுப்பூசிக்கான கேள்வி உலகம் முழுக்க அதிகரித்தது. இதனை இலங்கை - இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் மத்தியில் எவ்வாறு விநியோகிப்பது என்பது பற்றி ஆராயப்பட்டது.

ஃபைசர் தடுப்பூசி கோவிட் வைரஸை கட்டுப்படுத்துவதில் பெரும் பங்காற்றுவதாக இருப்பதாக கூறப்பட்டாலும், அதை உலகம் முழுக்க எடுத்துச்சென்று பலதரப்பட்ட மக்களுக்கு வழங்குவதில் ஒரு சிக்கல் இருந்தது. 

ஃபைசர் தடுப்பூசியை கடும் குளிர்நிலையில் சேமித்து வைக்கவேண்டும். தவறினால் தடுப்பூசி காலாவதியாகிவிடும். இலங்கை - இந்தியா போன்ற வெப்பவலய நாடுகளில் இதற்கு ஏற்ற கட்டமைப்பு வசதிகள் இல்லை.

இந்தநிலையில், அமெரிக்காவை சேர்ந்த மொடெர்னா நிறுவனத்தின் தடுப்பூசி பற்றிய அறிவிப்பு நேற்று வெளியாகியது.

அதில், கோவிட் தொற்றை தடுப்பதில் மொடெர்னா தடுப்பூசி 94.5% திறனுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மொடெர்னா தடுப்பூசிக்கான கேள்வி அதிகரித்துள்ளது.

ஃபைசர் தடுப்பூசியை போல அல்லாமல், மொடெர்னா தடுப்பூசியை கடும் குளிர்நிலையில் சேமித்து வைக்க வேண்டிய அவசியம் இல்லை. 

ஃபைசர் தடுப்பூசியை -70 டிகிரி குளிர் நிலையில் சேமித்து வைக்க வேண்டும். அதி குளிரூட்டியில் ஐந்து நாட்கள் வரை மட்டுமே வைக்க முடியும்.

ஆனால், மொடெர்னா தடுப்பூசியை 30 நாட்கள் வரை சாதாரண குளிரூட்டிகளில் உயர் குளிர் நிலையில் சேமித்து நீண்டகாலத்துக்கு பயன்படுத்தலாம்.

ஃபைசர் தடுப்பூசியை கடும் குளிர்நிலையில் சேமிக்க வேண்டிய தேவை இருந்ததால், அதை செல்வந்த நாடுகள் மாத்திரமே பயன்படுத்த முடியும் என்ற நிலை இருந்தது. 

ஆனால், மொடெர்னா தடுப்பூசிக்கு எந்த நிபந்தனைகளும் இல்லாததால் அதை உலகம் முழுக்க இருக்கும் வறிய நாடுகளும், மூன்றாம் உலக நாடுகளும் பயன்படுத்தக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மொடெர்னா தடுப்பூசி பற்றிய அறிவிப்பு வெளியான நிலையில், ஒரே நாளில் 50 லட்சம் தடுப்பூசிகளை மொடெர்னா நிறுவனத்திடம் இருந்து கொள்வனவு செய்ய விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.